Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

வாட்ஸ் ஆப் பாதுகாப்பானதா? | Is Whatsapp Secured?

ST



 Whatsapp-ஐ பயன்படுத்தாத மனிதர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்றால் யாரும் இங்கு இருக்க மாட்டார்கள். அந்த அளவு மக்கள் மத்தியில் அதிக உபயோகத்தில் இருக்கும் சமுக வலைதளங்களில் மிக முக்கியமானது Whatsapp.இதை பயன்படுத்துவது மிக எளிது என்பதால் இது மக்கள் மத்தியில் தனக்கென்று ஓர் இடத்தை தக்க வைத்துள்ளது.Whatsapp ஆனது இரு வித சிறப்பு அம்சங்களுடன் வெளியிடப்பட்டது.ஒன்று சாதாரண மக்களின் பயன்பாட்டிற்க்கும், மற்றொன்று தொழில் செய்பவர்களுக்கும் பயன்படுகிறது.மக்கள் அனைவரும் தாங்கள் பிறருடன் பகிர விரும்பும் செய்திகள் மட்டுமின்றி Images, Videos, மற்றும் Documents போன்றவற்றையும் பகிரக்கூடிய சிறப்பு அம்சமும் இதில் காணப்படுகிறது.இத்தகைய பயனுள்ள செயலியானது நாம் பயன்படுத்த பாதுகாப்பானதா என்பதைப் பற்றிதான் நாம் இப்பொழுது பார்க்கபோகிறோம்.



தோற்றம் :

Whatsapp ஆனது 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி Jan Koum மற்றும் Brian Acton என்பவர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப் பட்டது.இவர்கள் இருவரும் Yahoo நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள்.அப்பொழுது அதில் 55 பணியாளர்கள் மட்டுமே வேலை செய்தார்கள்.2014 ஆம் ஆண்டு Facebook நிறுவனமானது Whatsapp-ஐ 19 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுத்து வாங்கியது.



பயன்பாடு :

பொதுவாக நாம் ஒரு Social Media Platform-ஐ பயன்படுத்தி ஒருவருக்கு ஒரு செய்தியை அனுப்பும் போது, அந்த செய்தியானது அந்த Social Media Platform-ன் Webserver-ஐ சென்றடைந்து அங்கு சேமிக்கப்படும்.பின்னர், சேமிக்கப்பட்ட செய்தியானது நாம் அனுப்பின நபருக்கு சென்றடையும். இந்த Webserver-ஐ அவர்கள் பாதுகாப்பாக தான் வைத்திருப்பார்கள்.இருப்பினும், ஏதாவது  ஒரு Hacker இதிலுள்ள Loop Hole-ஐ பயன்படுத்தி Hack செய்தால், இந்த Webserver-ல் நம்மைப் போன்று பலர் அனுப்பின செய்தி மற்றும் பல தகவல்களை அந்த Hacker-ஆல் சேகரிக்க முடியும். Whatsapp மட்டுமில்லாமல் எல்லாவித Platform-ம் இப்படிதான் வேலை செய்கிறது. ஆனால், Whatsapp இங்கு வித்தியாசமான Security Level ஐ பயன்படுத்துகிறார்கள்.அதாவது, End to End Encryption என்ற பாதுகாப்பு முறையை பயன்படுத்துகிறார்கள்.



End to End Encryption :

நீங்க உங்க நண்பருக்கு Hi அப்படின்னு ஒரு செய்தி அனுப்பினால்,அது Digital முறையில் H என்பது 0 எனவும், I என்பது 1 எனவும் Encrypt செய்யப்படுகிறது.இந்த Encrypt செய்யப்பட்ட செய்தியானது Whatsapp-னுடைய Server-க்கு அனுப்பப் படுகிறது.பின்னர் நீங்கள் அனுப்பியவரின் Whatsapp-க்கு அனுப்பப் படுகிறது.அங்கு Decrypt செய்யபடுகிறது.அதாவது, 0 என்பது H என்றும், 1 என்பது I என்றும் மாற்றப்படுகிறது.இந்த Encrypt மற்றும் Decrypt முறையானது நாம் ஒவ்வொரு முறையும் பல வழிகளில் மாறுபடும்.அதாவது, நாம் முதன் முதலில் ஒருவருக்கு செய்தி அனுப்பப்படும் போது நமக்கும் அவருக்கும் இடையில் ஒரு Security Code ஆனது Generate செய்யப்படுகிறது.இந்த Security Code ஆனது நமக்கும் அவருக்கும் மட்டும் தான் ஒரேமாதிரி இருக்கும்.நாம் வேறு நபருக்கு அனுப்பினாலோ அல்லது வேறு நபர் நமக்கு செய்தி அனுப்பினாலோ இருவருக்கும் இடைப்பட்ட Security Code ஒரே மாதிரியாக இருக்கும்.ஆனால், வெவ்வேறு வகையான Security Code ஆனது Generate செய்யப்படும்.அது எப்படிஎன்றால் நாம் ஒருவருக்கு முதல் முதலில் செய்தி அனுப்பும்போது இரு விதமான Key ஆனது Generate செய்யப்படும்.அதில் ஒன்று Public Key என்றும், மற்றொன்று Private Key என்றும் அழைக்கபடுகிறது.Public Key ஆனது நம் Device-ல் இருக்கும்.அதுமட்டுமின்றி இந்த Public Keyஆனது Whatsapp-ன் Server-ல் சேமிக்கப்படும்.இந்த Public Key ஆனது நாம் அனுப்பும் செய்தியை Encrypt செய்யும்.Public Key ஆனது செய்தியை Encrypt மட்டுமே செய்யும்.இதனால் செய்தியை Decrypt செய்ய இயலாது.இவ்வாறு Encrypt செய்யப்பட்ட செய்தி Whatsapp-ன் Server-ஐ சென்றடையும்.பின்னர் அங்கிருந்து நாம் அனுப்பியவரின் Device-ஐ சென்றடையும்.அங்கு Private Key ஆனது செய்தியை Decrypt செய்யும்.இந்த Private Key ஆனது Whatsapp-ன் Server-ல் சேமிக்கபடுவது இல்லை.இது Receiver-ன் Device-ல் மட்டுமே காணப்படும்.இந்த Private Key-னால் மட்டுமே நீங்கள் அனுப்பிய செய்தியை Decrypt செய்ய முடியும்.அதாவது, வேறு எவ்வித Private Key-ஐ பயன்படுத்தியும் நாம் அனுப்பிய செய்தியை Decrypt செய்ய முடியாது.இதன் விளைவாக ஒரு Hacker, Whatsapp Server-ஐ Hack செய்தால் கூட நாம் அனுப்பிய செய்தியை படிக்க முடியாது.குறிப்பாக நாம் யாருக்கு என்ன செய்தி அனுப்புகிறோம் என்பதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது.



பாதுகாப்பு :

இத்தகைய பாதுகாப்பான  Whatsapp-ஐ சிலர் சரியான புரிதல் இல்லாமல் பாதுகாப்பற்றது என்று பரப்பி வருகின்றனர்.அதற்க்கு காரணம், அவர்கள் Whatsapp-ன் புதிய Privacy Policy திருத்தத்தை பற்றி தெளிவு இல்லாதது தான்.Whatsapp அதனுடைய Bussiness கணக்கிலுள்ள Meta Data-வை மட்டுமே எடுத்து தனது Bussiness-ற்கு பயன்படுத்துவதாக தெரிவித்தது. ஆனால், பலர் சரியான புரிதல் இல்லாமல் அது Personal கணக்கிலுள்ள Meta Data-வை பயன்படுத்துவதாக பரப்பி வருகின்றனர்.