Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

Vasco Da Gama - வாஸ்கோட காமா

ST

புது நாடுகளை கண்டறிவதிலும், பூமியை பற்றிய பல இரகசியங்களை அறிவதிலும் ஐரோப்பியர்கள் முன்னோடியாக இருந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். பல தேசம் கண்டறியும் ஆர்வலர்களின் பார்வை இந்தியாவின் மீதே அதிகம் காணப்பட்டது. ஏனென்றால் இந்தியாவில் கிடைத்த பல பொருட்கள் ஐரோப்பியர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. அவற்றில் நவரத்தினகற்கள், மயிலிறகு மட்டுமின்றி மிளகு மற்றும் கிராம்பு போன்ற சமையலுக்கு தேவையான நறுமணப் பொருட்களும் அடங்கும். முன்காலத்தில் இந்த பொருட்கள் அனைத்தும் தரை மார்க்கம் மூலமாக ஐரோப்பாவிற்கு கொண்டு 
செல்லப்பட்டது. வழியிடையில் பல இடைத்தரகர்கள் காணப்பட்டனர்.இருப்பினும் தரைவழிப்பயணம் அதிகப்படியான தொலைவை கொண்டுள்ளதால் அதன் பாதுகாப்பு கேள்விக்குரியதாகவே இருந்தது. அந்த காலக்கட்டத்தில் ஆகாய வழி தொடர்பு இல்லாததால், ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழி மூலமாக வணிகம் செய்ய ஐரோப்பியர்கள் எண்ணினர். அவ்வாறு கடல் வழி வணிகம் செய்தால் பொருட்களின் பாதுகாப்பு 
அதிகரிப்பதோடு, அதை விலை மலிவாகவும் விற்க முடியும் என்பது அவர்களின் கனவு. இதுவே பின்நாட்களில் அவர்களை கடல் வழி வணிகத்தை மேற்கொள்ள உறுதுணையாக இருந்தது.போர்சுகீசிய நாடுகளை கண்டறியும் ஆர்வலர் ஒருவர் 1498 - ம் ஆண்டு இந்தியாவில்
கோழிக்கோடு என்னுமிடத்தில் தனது கால் தடத்தினை பதித்து ஐரோப்பியர்களின் கனவை நினைவாக்கினார். இவ்வாறு ஐரோப்பியர்களின் கனவை நினைவாக்கிய ஒரு மாமேதையை 
பற்றிதான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். அவர்தான் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு கடல்மார்க்கத்தைக் கண்டறிந்து உலக வரலாற்றில் இடம்பிடித்த வாஸ்கோட காமா.

வாஸ்கோட காமாவின் பிறப்பு மற்றும் குடும்ப வாழ்கை :

வாஸ்கோட காமா போர்ச்சுக்கலின் தென்மேற்குக் கடற்கரையிலுள்ள சைன்ஸ்(Sines) என்னுமிடத்தில் 1460-ம் ஆண்டு ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். அவரின் தந்தை (எஸ்டவாவ் ட காமா) Estevao da Gama மற்றும் தாயார் (இசபெல் சொட்ரே)Isabel Sodré அவர்கள்.அவரது தந்தையும் ஒரு நாடுகாண் பயணி. இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடிக்க முயன்றி செய்தவர்களில் அவரும் ஒருவர். இருப்பினும் அக்கனவு நிறைவேறாமல் அவர் இறந்துவிட்டார். தன் மகன் தனது கனவை நினைவாக மாற்றுவான் என்று அவர் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். 


முதல் கடல்வழி பயணம் :

வாஸ்கோட காமாவின் அப்பாவின் இறப்பிற்கு பின் போர்ச்சுக்கீசிய மன்னர் இரண்டாம் ஜான் அப்பணியை முடித்துத் தர வாஸ்கோட காமாவிடம் கேட்டுக்கொண்டார். வாஸ்கோட காமா கடற்படையில் அதிகாரியாக சிலகாலம் பணி ஆற்றினார். இதனால் இந்தியாவிற்கான கடல் வழியை கண்டறிந்து வரும்படி மன்னர் தன்னிடம் கூறியபோது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு செய்ய புறப்பட்டார். 1497-ம் வருடம் ஜூலை 8-ம் தேதி போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனிலிருந்து(Lisbon) 4 கப்பல்கள் புறப்பட்டது.அவை Sao Gabriel, Sao Rafael, Berrio, starship என்று அழைக்கப்பட்டது. அந்த 4 கப்பல்களில் மொத்தமாக 170 பேர் வாஸ்கோட காமாவின் தலைமையில் இந்தியாவினை நோக்கி புறப்பட்டார்கள். அவர்கள் 90 நாட்களுக்கும் மேலாக கடலில் பயணம் செய்தார்கள். அவர்கள் அவ்வாண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி ஆப்பிரிக்காவின் தென்கோடியில் உள்ள Cape of Good Hope-ஐ அடைந்தார்கள். அதற்குபின்னர் ஆப்பிரிக்காவின் கரையோரம் வடக்கு திசை நோக்கி பயணத்தைத் தொடங்கினார்கள். 

Natal :

Natal என்பதற்கு போர்ச்சுக்கீசிய மொழியில் கிறிஸ்துமஸ் என்று பொருள். அந்த ஆண்டில் கிறிஸ்துமஸ் நெருங்கும்போது அவர்களது கப்பல் ஆப்பிரிக்காவின் கிழக்கு கரையோரம் சென்றதால் அப்பகுதிக்கு Natal என்ற பெயரிட்டார் வாஸ்கோட காமா. அந்த பெயரில் தான் அவ்விடம் இன்றலவிலும் அழைக்கப்படுகிறது. பின்பு இஸ்லாமிய வர்த்தகர்களது கட்டுப்பாட்டின் கீழிருந்த Mombasa, Mozambique, Malindi என்ற துறைகளில் தரை இறங்கினார் வாஸ்கோட காமா. தங்களது வர்த்தகத்திற்கு இவர்களால் தீமை ஏற்படும் என்று கருதிய இஸ்லாமிய வர்த்தகர்கள் இவரை தனது எதிரியாக பார்த்தார்கள். அவரின் கப்பல்களையும் கைப்பற்ற முயற்சி செய்தார்கள். அதை முறியடித்தார்.



கோழிக்கோடு வந்தடைதல் :

அதுமட்டுமின்றி Malindi-ல் ஒரு குஜராத்தி மாலுமியை தன்னுடன் சேர்த்து பயணத்தைத் தொடர்ந்தார் வாஸ்கோட காமா. அம்மாலுமியின் ஆலோசனை படி அரேபியப்பெருங்கடலினது பருவநிலை மாற்றத்தை கண்டறிந்து 23 நாட்கள் கவனமாக கப்பல்களை செலுத்தினார்.இதன் பலனாக இந்தியாவின் தெற்கு கரையோரம் உள்ள கேரளப்பகுதியினது கள்ளிக்கோட்டையை (கோழிக்கோடு) வந்தடைந்தார் வாஸ்கோட காமா. அவ்வரலாற்று சிறப்புமிக்க நாள் 1498-ம் ஆண்டு மே 20-ம் தேதி. கேரளாவிலுள்ள கோழிக்கோடு துறைமுகம் தென்னிந்தியாவின் மிகவும் முக்கியமான வர்த்தக மையமாக இருந்தது. அக்காலத்தில் கோழிக்கோட்டை ஆட்சி செய்து வந்த Samudiri (Zamorin) ராஜா வாஸ்கோட காமாவை வரவேற்றார். இருப்பினும் வாஸ்கோட காமா தனக்கு தேவையான பொருட்களைஅன்பளிப்பாக கொடுக்காததால் அவர் மிகவும் கோபமடைந்தார். மேலும், உள்ளூர் வியாபாரிகளை பகைத்துக்கொள்ள விரும்பாத அவர் போர்ச்சுக்கீசியர்களோடு தனது வர்த்தக உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள மறுத்து விட்டார்.

இந்திய பெருங்கடலின் தளபதி :

அதிகப்படியான இந்திய நறுமணப்பொருட்கள் உடன் ஆகஸ்ட் 29-ஆம் தேதி லிஸ்பன் - ஐ நோக்கி பயணத்தை தொடர்ந்தார் வாஸ்கோட காமா. இப்பயணம் மிக கடுமையானதாக காணப்பட்டது வழியிடையில் அவரின் பல வீரர்கள் Scurvy என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தனர். ஓரு ஆண்டு மேலாக பயணம் செய்தபிறகு சென்ற நான்கு கப்பல்களில் 2 மட்டும் பத்திரமாக போர்ச்சுக்கலை வந்தடைந்தது. கப்பலில் பயணம் செய்தவர்களில் 170 பேரில் 55 பேர் மட்டுமே நாடு திரும்பினார்கள்.இரு ஆண்டுகளுக்குப் பின் தேசம் திரும்பிய வாஸ்கோட காமாவை மகிழ்ச்சியோடு வரவேற்ற மன்னர் அவருக்கு பெரும் பொருட்களை பரிசாக வழங்கினார். அதனுடன் அவருக்கு இந்தியப்பெருங்கடலின் தளபதி என்ற பட்டத்தை அளித்து கெளரவித்தார். 80 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்பட்ட கனவு நிறைவேறிவிட்டதால் மகிழ்ந்தார் மன்னர். 




இந்தியாவை நோக்கிய இரண்டாம் பயணம் :

மூன்று ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்தியா நோக்கி புறப்பட்டார் வாஸ்கோட காமா. இந்ததடவை தன்னை எதிர்த்த முஸ்லீம் வணிகர்களை எதிர்க்கும் திட்டத்துடன் இருபது கப்பல்களோடு பயணம் செய்தார். அப்பயணத்தின் போது பல கொடூ செயல்களில் அவர் ஈடுபட்டதாக வரலாறு கூறுகிறது. போர்ச்சுக்கீசியர்களோடு வர்த்தகம் செய்ய மறுத்த பல இந்தியர்களை கொலை செய்தார். ஒரு நிகழ்ச்சியில் ஒரு கப்பலை வழி மறித்து பொருட்களை எல்லாம் பறித்துக்கொண்டு கப்பலில் காணப்பட்ட 380 பயணிகளை அக்கப்பலில் வைத்து பூட்டி கப்பலை தீயை வைத்து கொளுத்தினார். இதனால் கப்பலில் இருந்த அனைவரும் பரிதாபமாக மடிந்தார்கள்.

கோழிக்கோடை தாக்குதல் :

இரண்டாம் முறை வாஸ்கோட காமா கோழிக்கோட்டினை வந்தடைந்த போது முஸ்லீம்களை அங்கிருந்து விரட்டுமாறு Samudiri மன்னரை கேட்டுக்கொண்டார். மன்னர் தயங்கினார் இதனால் வாஸ்கோட காமா இரக்கமில்லாமல் 38 நபர்களை கொலைசெய்து அவர்களது உடல்களை கடலில் மிதக்க விட்டார்.பின்னர் கோழிக்கோடு துறைமுகத்தை குண்டுகள் வீசி தாக்கினார். வேறு வழியில்லாமல் அவருடன் வர்த்தக உடன்படிக்கை செய்தார் Samudiri ராஜா. அந்த உடன்படிக்கையுடன் போர்ச்சுக்கல் திரும்பும் போது கிழக்கு ஆப்பிரிக்காவில் பல போர்ச்சுக்கீசிய காலனிகளை உருவாக்கினார் வாஸ்கோட காமா. 

இந்தியாவை நோக்கிய மூன்றாவது பயணம் :

மூன்றாம் முறையாக இந்தியா வந்தடைந்தபோது இந்தியாவின் அரச பிரதி நிதியாக நியமிக்கப்பட்டார் வாஸ்கோட காமா. இருப்பினும் அவர் சில மாதங்களில் நோய்வாய்ப்பட்டு 1524-ம் வருடம் டிசம்பர் மாதம் 24-ம் நாள் கோழிக்கோட்டில் இயற்க்கை எய்தினார். கொச்சியிலுள்ள ஒரு தேவலாயத்தில் அவரின் உடல் புதைக்கப்பட்டு பிறகு 1539-ம் வருடம் அதன் மீதி போர்ச்சுக்கலுக்கு அனுப்பபட்டது. இறுதிப்பயணங்களில் அவர் புரிந்த கொடுமை மற்றும் வன்முறைகளை நீக்கி பார்த்தால் வாஸ்கோட காமாவின் கண்டுபிடிப்பு வரலாற்று சாதனைகளில் மிக முக்கியமான ஓர் இடத்தைப் பெற வேண்டிய ஒன்று. இந்தியாவிற்குரிய கடல் வழியை அவர் கண்டறிந்த பின் உலக நாடுகள் அதன் நேரடி வர்த்தகப் பலனை உணரத்தொடங்கியது. இந்தியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே நேரடித் தொடர்புகள் ஏற்பட்டது. பல தேசங்களில் போர்ச்சுக்கீசிய காலணிகள் உருவாக வாஸ்கோட காமாவின் முதல் பயணம் முக்கிய காரணமாக அமைந்தது. அவரின் பயண அனுபவங்களை உள்ளடக்கிய 'Lusiadas' என்ற நூல் போர்ச்சுக்கலின் தேசிய காவியமாக பார்க்கப்படுகிறது. கண்டுபிடிக்காத அல்லது அறியாத ஒன்றை நோக்கி மிக ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைத்தால் நம்மில் எத்தனை பேர் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம். ஆபத்துகளை கண்டு நாம் விலகினால் சாதனைகளும் நம்மை விட்டு விலகும் என்பதே எழுதப்படாத உண்மை.