Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

Albert Einstein - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

ST

உலக வரலாற்றில் பல துறையில் பல்வேறு கண்டுபிடுப்புகளை நிகழ்த்த அடிததளமிட்டவர் ஐன்ஸ்டீன்.ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1879 - ம் ஆண்டு மார்ச் மாதம் 14 தேதி  ஜெர்மனி(German)  நாட்டிலுள்ள  வுர்ட்டேம்பெர்க்(Wurttemberg)   மாநிலத்திலுள்ள  உல்ம்(Ulm)  என்னுமிடத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் ஹெர்மன் ஐன்ஸ்டீன் (Hermann Einstein) மற்றும் பாலின் ஐன்ஸ்டீன் (Pauline Einstein)  ஆவார்கள்.அவருக்கு இயற்கையாகவே இயற்பியல் மீதும் கணிதம் மீதும் ஆர்வம் இருந்தது.அவருக்கு ஒருமுறை உடல்நிலை சரி இல்லாமல் போனது அப்போது அவரது தந்தை அவருக்கு காம்பஸ் ஒன்றை பரிசளித்தார்.இது இவரின் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.காம்பஸ் ஐ எந்த பக்கம் கொண்டு சென்றாலும் அது ஒரே திசையை காட்டியதால் அது அவரை ஈர்த்தது.இவர் அதைப்பற்றி தனது மனதில் காட்சிபொருளாக சிந்தித்தார்.பலகலை கழகத்தில் தனது படிப்பை முடித்ததும் மிலவே மாரிக் ஐ மணந்தார்.இவர் மிலவே மாரிக் ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார்.பின்னர் சில காலங்களில் இருவருக்கும் ஒத்து போகவில்லை அதனால் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர்.பின்னர் தனது உறவுக்கார பெண்ணான எல்சா என்பவரை மணந்தார்.அவரும் சிறிது காலத்திலேயே இவரை விட்டு பிரிந்து விட்டார்.எல்சா உடல்நலக் குறைபாடு காரணாமாக இறந்தார்.