உயர்ந்தவற்றை அடைய உந்தபடுவதே இலட்சியம்.
ஆன்மா தன்பாரம்பரியத்தை இழந்ததற்காக மௌனமாக அழும்.
அதிக ஆசையை ஒழித்தால் அமைதி கிடைக்கும்.
மனதால் நினைத்தால் பெறலாம்.
தன்னை தானே வெல்வதே சலனங்களில் இருந்து அமைதிக்கு வழி.
நம் எண்ணங்களாலும் செயல்களாலும்நம் வாழ்க்கையை உருவாக்குகிறோம்.
பாவத்தை வெற்றி கொள்வதும் தீவினையை வெற்றி கொள்வதும் வாழ்வில் சாத்தியம் தான்.
ஒரு மனிதர் விரும்பமும், ஆர்வமும், உடையவராக இருக்கின்றபோது, அவரால் நல்லதையும் உண்மையையும் கண்டறிய முடியும்.
ஒவ்வொரு வினாடியிலும் உங்களுக்கு தேர்ந்தெடுக்க வாய்பிருக்கிறது.ஒவ்வொரு மணியும் உங்கள் விதியை தீர்மானிக்கிறது.
தூய்மையான வாழ்கையை நேசிக்கிறவர், தினமும் அவரது மனதைப் புதுப்பித்து கொள்கிறார்.
தினமும் உண்மையை தியானித்து அதை அடைய முயற்சி செய்யுங்கள்.
தவறுகளும், தூய்மைக்கேடுகளும் வெளிபடுகின்றபோது, அவற்றை தூய்மை செய்யுங்கள்.
நல்வாழ்வு பெறுவதற்கு ஆர்வத்துடன் முயலுங்கள்.
உலகத்தின் சச்சரவுகள், எப்போதுமே ஒரேயொரு பொதுவான காரணத்திலிருந்து ஆரம்பிக்கின்றன.அது தன்னலமேயாகும்.
தன்உயிரில் புதைந்து கிடக்கும் குனங்களின்படியே ஒருவன் வாழ்கிறான், அடுத்தவர் குணங்களின்படி அல்ல.
ஆன்ம சோதனை அதிகரிக்கும் போது ஆன்மத் தேடலும் அதிகரிக்கிறது.
எங்கு கவர்ச்சி அதிக சக்தியுடன் இருக்கிறதோ, அங்கு கிடைக்கிற வெற்றியும் மிகச் சிறந்ததாக இருக்கும்.
நேர்மை என்ற அழியாத தத்துவத்தின் தேவைதான் ஆத்மாவின் தேவையாகும்.
சிறந்த பண்புகளைக் கொண்ட ஒரு வாழ்கை, நேர்த்தியுடனும் சிறப்பு வாய்ந்ததாகவும் இருக்கும்.
உங்களிடம் இல்லை என்பது உங்களுடைய உணர்வு நிலையின் பிரதிபலிப்பாகும்.அதனால் அதைப்பற்றி கவலைப்பட்டு பயனில்லை.
உங்கள் உள்ளுக்குள்ளாக நீங்கள் என்னவாக இருகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும்.ஏனெனில், வெளியில் இருக்கிற எல்லாமே, அதன் பிரதிபலிப்பாகவும் சாயலாகவும் இருக்கின்றன.
உங்களது தீர்மானத்தை புதுப்பித்து கொள்ளுங்கள்.கவர்ச்சி உங்களை ஈர்க்கின்ற நேரத்தில், சரியான வழியிலிருந்து விலகிச் செல்லாதீர்கள்.
நீடித்த பயிற்சியின் மூலம் மட்டுமே, நீங்கள் உண்மையை அடைய முடியும்.
ஞானிகள் அவர்களது எண்ணங்களை தூய்மையாக்கிக் கொள்கிறார்கள்.
நேர்மையாகவும், மென்மையாகவும், தூய்மையான இருதயதுடனும் வாழுங்கள்.
தீங்கை குறைத்து, நல்லதை சேர்ப்பதில் இடைவிடாத, கடும் முயற்சியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
வினையின் தன்மையை ஒத்ததாகவே வினைபயனியின் தன்மையும் இருக்கும்.
உங்களது இருதயத்தில் அன்புடன், உங்களது பணியை செய்யுங்கள். அப்போது லேசாகவும் உற்சாகமாகவும் இருப்பீர்கள்.
எல்லாத் தீமைகளும் திருத்தப்பட தக்கதாகவும் குணப்படுத்த தக்கதாகவும் இருக்கின்றன.
எனவே அவை நிலைத்து இருப்பதில்லை.
தெய்வீகமான மெய்மைகள் மையமாக கொண்டுள்ள தியானம், பிரார்த்தனையின் சாரமாகும் ஆன்மாவாகவும் இருக்கிறது.
அனுபவம் என்ற பள்ளியில், கீழ்ப்படியாத ஒரு குழந்தையாக இருப்பதை விட்டுவிடுங்கள்.
பணிவுடனும், பொறுமையுடனும், உங்களது இறுதியான திறமைக்காக தீர்மானிக்கப்பட்டு உள்ள பாடங்களை, கற்றுக் கொள்ள ஆரம்பியுங்கள்.
ஆன்மிக வாழ்க்கையிலும், அறிவியலும் உள்ள எல்லாம் வளர்ச்சிக்குமான ரகசியம் தியானம்தான்.
இது தூய்மையாகவும், தன்னலம் அச்சும் இருக்கிறதோ, அதைப்பற்றி நீங்கள் தொடர்ந்து, விடாமல் சிந்தித்தால், நிச்சயமாக நீங்கள் தூய்மையானவர் ஆகவும், தன்னலமற்றவர் ஆவீர்கள்.
தியானத்தின் பாதையில் நுழையுங்கள். தியானத்தின் மிகவும் உயர்ந்த, உன்னதமான நோக்கமாக உண்மை இருக்கட்டும்.
அமைதி இன்மையும், வலியும், துயரமும், வாழ்க்கையில் நிழலாக இருக்கின்றன. தீங்கினுள்
மனிதர்கள் தொடர்ந்து இருக்கிறார்கள். ஏனெனில், அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக அவை கொண்டுவந்த பாடத்தை கற்றுக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை. அல்லது அவர்கள் தயாராக இல்லை.
உங்களை விட்டு நீங்கள் வெளியே வர வேண்டும். உங்களைப் பற்றியே நீங்கள் படிக்கவும் புரிந்து கொள்ளவும் ஆரம்பிக்கவேண்டும்.
ஒவ்வொரு ஆத்மாவும், அதற்குச் சொந்தமானதையே கவருகிறது. அதற்கு சொந்தமில்லாத எதுவும் அதனிடம் வரமுடியாது.
நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அவ்வாறே உங்களது உலகமும் உள்ளது.
ஒவ்வொரு ஆன்மாவும், சேகரிக்கப்பட்ட அனுபவங்கள், எண்ணங்கள், ஆகிவிட்டது ஒரு சிக்கலான இணைப்பாக இருக்கிறத. அதன் வெளிப்பாட்டுகான, மேம்படுத்தப்பட்ட ஒரு வாகனமாக உடல் உள்ளது.
மிக உயர்ந்த நல்லதை நாடுகிறவர்களுக்கு எல்லா பொருட்களும், ஞானத்துடன் துணைபுரிகின்றன.
எல்லாவிதமான சிறப்பும், எல்லாவிதமான நன்மைகளும், பணிகிற பாதங்களின் வருகைக்காக காத்திருக்கின்றன.
எல்லா மனிதர்களின் சாதனைகளும் முதலில் எண்ணத்தில் உருவாக்கப்படுகின்றன. அதன் பின்னர் வெளிப்படுகின்றன.
அமைதியான வெற்றி கொள்கிற எண்ண சக்திகள்தான், எல்லாப் பொருட்களையும் வெளிப்படுத்திக் காட்டுகின்றன. ஒரு வலிமையான நம்பிக்கையினாலும், பின் வாங்காத ஒரு குறிக்கோளாலும் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை.
நல்ல எண்ணங்களை எண்ணுங்கள். அவை, உங்களது வெளிப்புற வாழ்க்கையில் நல்ல நிலைமைகளை உருவாக்கி, விரைவில் செயல்களாக ஆகின்றன.
தன்னை கட்டளையிடுவதிலும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதிலும், வெற்றி பெற்ற ஒருவர் மட்டும்தான், பிறரை கட்டளை இடுவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் தகுதி பெற்றவராக இருக்கிறார்.
ஒரே ஒரு குறிக்கோளுடன் வாழுங்கள். நேர்மையானதும் உபயோகமானதுமான ஒரு இலக்கை கொண்டிருங்கள். அதற்காக தங்கு தடையின்றி உங்களை அர்ப்பணித்து விடுங்கள்.
சுயநலம் சுய அழிவுக்கு வழிவகுக்கும்.
எல்லா விதமான சூழ்நிலைகளிலும், நீங்கள் சரியானது என்று நம்புவதையே செய்யுங்கள்.
விதியையும் தெய்வீக சக்தியையும் நம்புங்கள்.
நீங்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவீர்கள்.
முழு நிறைவான அன்பு, முழுநிறைவான சக்தியாகும்.
முழுநிறைவான விதி முழுநிறைவான ஞானமாகும்.
மெய்மையை நீங்கள் உண்மையாகவே நாடுகிறார்கள் என்றால், அதை அடைவதற்கு தேவையான முயற்சி செய்யவும் நீங்கள் விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும்.
உங்களது தியானத்தின் உன்னதமான உயர்நிலை பொருளாக இருக்கட்டும்.
காலை வெளிச்சத்தில் பெறுவதற்காக, பூ அதன் இதழ்களை திறப்பது போல, மெயின் கீர்த்தி வாய்ந்த வெளிச்சத்தைப் பெற, உங்களது ஆன்மாவை மேலும், மேலும் அதிகமாக திறந்து வைக்கவும்.
லட்சியம் என்னும் இரகுகளின் உதவியுடன், மேல் நோக்கி பறந்து செல்லுங்கள். பயமில்லாமல் இருங்கள். மேன்மையான சாதனைகளில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
ஆரம்பம், ஒரு காரணமாக இருக்கிறது. அதனால், அதனைப் பின்பற்றி ஒரு விளைவு வந்தே தீர வேண்டும்.
ஆரம்பம் ஒரு வழிகாட்டுகிறது. விளைவுகள் ஒரு முழுமைக்கு அழைத்துச் செல்கின்றன.
வலியின் தன்மையை ஒத்ததாகவே விணைபயணியின் தன்மையும் இருக்கும்.
தினசரி வாழ்க்கையின் பொதுவான விவரங்கள்தான், ஞானம் அமைகிறது.
பாகங்கள் எல்லாம் சரியான ஒழுங்கு முறையில் அமைக்கப்பட்டிருக்கிற போது, முழுமையும், எவ்விதக் குறைகளும் இல்லாமல் தான் இருக்கும்.
சிறிய வேலைகளை புறக்கணிப்பதும் அல்லது மேலோட்டமான அக்கறையுடன் மட்டுமே செய்வதும், உறுதியற்ற தன்மையும், மடமையான செயல் தன்மையும் குறிக்கிற ஒரு அடையாளமாக இருக்கிறது.
இந்தக் கணத்தில் வலிமையுடனும், ஞானத்துடனும் செயல்படுவதைத் தவிர, வலிமைக்கும் ஞானத்துக்கும் வேறு வழியில்லை.
சிறியவற்றை வெற்றிகொள்கிறவரே, சிறப்பானதை உரிமையுடன் அடைபவராக இருக்கிறார்.