> American Dragon: Jake Long - Cartoon Tamilan - Archive Url -->

Encrypting your link and protect the link from viruses, malware, thief, etc! Made your link safe to visit.

American Dragon: Jake Long - Cartoon Tamilan

ST

அமெரிக்கன் டிராகன்: ஜேக் லாங் :

இது ஒரு அமெரிக்க அனிமேஷன் தொலைக்காட்சித் தொடர்.இதை  ஜெஃப் கூட் என்பவர் எடி குசெலியன் மற்றும் மாட் நெக்ரேட் ஆகியோருடன் இணைந்து உருவாக்கினர்.இந்த தொடரானது  ஜனவரி 21, 2005 அன்று டிஸ்னி சேனலில் திரையிடப்பட்டு, செப்டம்பர் 1, 2007 அன்று முடிவு பெற்றது.இதில் மொத்தம் 52 Episodes காணப்படுகிறது.

கதை தொகுப்பு :

மன்ஹட்டனின் நியூயார்க் நகரத்தில் வசித்து வரும் ஒரு சீன-அமெரிக்க சிறுவன் ஜேக் லாங்கின் கதையைச் சொல்கிறது.அவன் அவனது இளமை பருவத்தில் டிராகனாக மாறும் சகதியும் அதிக திறமையும் கொண்டுள்ளான்.அவன் தனது முழு திறனையும் திறந்து அமெரிக்க டிராகனாக மாறி, ​​நகரத்தில் வாழும் மந்திர உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு அவன் பல தடைகளைத் தாண்ட வேண்டும்.ஆனால் ஜேக் அவனது பள்ளி தோழி ரோஸின் மீது காதல் வசப்பட்டுள்ளான்.ஜேக் - கிற்கு தெரியாமல் ரோஸிடம் ஒரு மர்ம ரகசியம் உள்ளது.அவள் இயற்கை டிரகன்களை அழிக்கக்கூடிய ஹன்ட்ஸ்கிலனின் உறுப்பினர்.ரோஸ் - ஐ அவர்கள் ஹன்ட்ஸ்கர்ல் என்று அழைப்பார்கள்.ரோஸ் - ஐ வளர்த்த ஹன்ட்ஸ்மேன் தான் ஹன்ட்ஸ்கிலனின் தலைவர்.ஜேக் நகரத்திற்கு அவரது நெருங்கிய நண்பர்களான ட்ரிக்ஸி மற்றும் ஸ்பட் ஆகியோருடன் செல்கிறான்.ஜேக் அவனது குடும்பத்துடன் வசிக்கிறான்.அதில் அவனது அப்பா (ஜோனதன் லாங்), அம்மா (சூசன் லாங்),தாத்தா (லுவாங் லோ ஷி) மற்றும் தங்கை  (களே கே லாங்) உள்ளனர்.அவனது தந்தை ஒரு சிறந்த தொழிலதிபர்.அவனது தாத்தா அம்மாவின் அப்பா ஆவார்.அவனது அப்பாவிற்கு ஜேக்கிற்கு டிராகன் ஆக மாறக்கூடிய சக்தி இருப்பது தெரியாது.மேலும் அவர்கள் டிராகன் குடும்பம் என்னும் ரகசியம் அவருக்கு தெரியாது.அவனது அம்மா மற்றும் அப்பா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள்.ஜேக்கின் தாத்தாஅவனுக்கு மாய மந்திர வழி பயிற்சிகளை கொடுக்கிறார்.அவர்களுடன் பேசும் ஒரு நாயும் உள்ளது.அதன் பெயர் ஃபூ டாக்.

முக்கிய கதாபாத்திரங்கள் :

ஜேக் லாங் : ஒரு சீன - அமெரிக்க 13 வயது சிறுவன்.இவன் ஒரு ஸ்கேட் ஃபோர்ட் விளையாட்டு வீரன்.அவனுக்கு வீடியோ கேம்ஸ் விளையாடுவது,இசை கேட்பது, மற்றும் காமிக்ஸ் புத்தகம் படிப்பது பிடிக்கும்.அவனுக்கு தன்னம்பிக்கை மிகவும் அதிகம்.அவன் அவனது அழகிய பள்ளி தோழியான ரோஸ் என்பவள் மீது காதல் மோகம் கொண்டுள்ளான்.அவள் ஹண்ட்ஸ்கர்ல் என்று அவனுக்கு தெரியும் வரை.அந்த ரகசியம் தெரிந்தவுடன் அவர்களுக்குள் ஒரு பிரிவு ஏற்படுகிறது.அவர்கள் ஒருவர் மீது ஒருவர் அளவுகடந்த காதல் கொண்டிருந்தனர்.இருப்பினும் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொது அதனை வெளிபடுத்த முடியாமல் தவித்தனர்.ஜேக் ரோஸ் மீது கொண்ட காதலால் அவளை ஹண்டகிலன் கூட்டத்தில் இருந்தது பிரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு அனைத்தும் தோல்வியை தழுவியது.பின்னர் கடைசியாக மண்டை ஓடுகளை இணைப்பதன் மூலமாக கிடைக்கும் ஒரு வரத்தின் மூலம் ஹன்ட்ஸ்கிலன் இனம் முழுவதும் ரோஸை அவர்கள் பார்பதற்கு முன்னரே அழிந்து விட வேண்டும் என்று வரத்தை வேண்டி கொண்டான்.இதன் விளைவாக அவன் ரோஸ் - ஐ விட்டு முழுவதுமாக பிரியும் நிலைமை ஏற்பட்டது. அதாவது காலச்சக்கரம் மாற்றி அமைக்கப்படுகிறது.பல நாட்கள் ஜேக் தனிமையில் ரோஸ் - ஐ நினைத்து மிகவும் வருந்துகிறான். திடிரென்று ஒருநாள் ஜேக் சாலையில் நடந்து செல்லும்போது ரோஸ் அங்கு நடந்து செல்வதை பார்கிறான்.அவன் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறான்.அவன் ரோஸிடம் தன்னை அறிமுகம் செய்கிறான். ஆனால் அவளுக்கு ஜேக் - ஐ அடையாளம் தெரியவில்லை.பின்னர் ஜேக் வருத்தத்துடன் அங்கிருந்து செல்கிறான்.சில நாட்கள் கழித்து டிராகன் கூட்டம் நடைபெறுகிறது.அங்கு ஜேக்கின் சக்தியை அவர்கள் பறிக்கிறார்கள். அதில் டார்க் - டிராகன் அழையா விருந்தாளியாக வருகிறது.டார்க் - டிராகன் ஜேக் - இன் தாத்தா வை கடத்தி செல்கிறது.அதனை எதிர்கொள்ள முடியாமல் ஜேக் ரோஸின் உதவியை நாடுகிறான்.சாலையில் அவளை சந்திக்கிறான். அவளிடம் டிராகன் பற்றியும் மந்திர டிராகன் கூட்டம் நடைபெறும் இடத்தையும் சொல்கிறான்.அவனை தெரியாது என்று கூறி அங்கிருந்து செல்கிறாள்.மந்திர டிராகன் கூட்டம் நடைபெறும் இடத்தை ஜேக் அடைகிறான்.அவன் டார்க் - டிராகன் உடன் சண்டை போடும் நிலைமை ஏற்படுகிறது.அவன் டார்க் - டிராகன் உடன் சண்டையிடும் போது இடையில் ரோஸ் ஜேக் - கிற்கு உதவியாக அங்கு வருகிறாள்.பின்னர் இருவரும் சேர்ந்து டார்க் - டிராகன் ஐ தோர்கடிகின்றனர்.அதன் பின் ஜேக் மற்றும் ரோஸ் ஒன்றாக இணைகின்றனர்.

லுவாங் லாவோ ஷி : ஜேக்கின் தாத்தா மற்றும் ஒரு சீன டிராகன். அவர் கால்வாய் தெருவில் ஒரு மின்னணு கடையை நடத்தி வருகிறார்."ஒருபோதும் வாடிக்கையாளர் வேண்டாம், ஒருபோதும் விற்பனை செய்ய வேண்டாம்" என்ற உயர்ந்த கொள்கையுடன் கடையில் ஈ அடித்துக் கொண்டிருக்கிறார்.அவரது ஒரே நண்பர் பேசும் நாய் ஃபூ டாக்.ஜேக்கிற்கு பயிற்சி அளிபதற்காக அதிக  நேரத்தை செலவிடுகின்றனர்.அந்த பயிற்சியின் மூலம் ஜேக் வலிமையனவனாக மாறுகிறான்.இருபினும் அது அவனுக்கு அதிக மனதளவில் கஷ்டத்தை தருகிறது.1972 ஆம் ஆண்டில் அவரது இளமை பருவத்தில், டார்க் - டிராகனை சந்திப்பதற்கு முன்பு, ஜேக்கின் தாத்தா லக்கி லாவோ ஷி என்று அழைக்கப்பட்டார்.

ஃபூ டாக் : 600 வயதான பேசும் நாய்.இது லாவோ ஷியின் ஒரே துணை.இதன் வாழ்நாள் முழுவதும் மண்டையில் முடி இல்லாத பேசும் பூனையுடன் சண்டை இடுவதில் செலவழித்தது.

ஆர்தர் பேட்ரிக் "ஸ்பட்" ஸ்பூடின்ஸ்கி : ஜேக்கின் சிறந்த நண்பர்கள்.ஜேக்கின் மீது அதிக பாசம் கொண்டுள்ளான்.இவன் மெதுவாக செயல்படுவான்.இருபினும் சில நேரங்களில் புத்திசாலித்தனமான செயல்களை செய்கின்றான்.இவன் ஷேக்ஸ்பியரின் முழு படைப்பையும் நினைவில் வைத்துள்ளான்.இவன் ஒரு அரை மந்திரவாதி.இவனது தாத்தா மந்திர கோப்பையிலிருந்து வெளிவந்த பூதத்தைமீண்டும் கோப்பையினுள் அடைக்கும் மந்திரத்தை தெரிந்து வைத்திருந்தார்.இரண்டாவது சீசனின் முடிவில் அவர்கள் டேட்டிங் தொடங்கும் வரை அவனை வெறுக்கும் சியர்லீடர் ஸ்டேசி மீது அவன் காதல் மோகம் கொண்டிருந்தான்.

டிரிக்ஸி கார்ட்டர் : ஜேக்கின் சிறந்த தோழி.மிகவும் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை கொண்டுள்ளவள்.நகைச்சுவை திறனும் புத்தி கூர்மையும் இவளிடம் காணபடுகிறது.

ஹேலி கே லாங் : ஜேக்கின் ஏழு வயது தங்கை.மிகவும் புத்திசாலித்தனமான,ஆனால் எரிச்சலூட்டும் சிறிய தங்கை.இவளுக்கும் டிராகன் சக்திகள் இருக்கிறது.இவள் ஜேக்கை விட தான் சிறந்தவள் என்பதை நிருபிக்க மிகவும் போராடுகிறாள்.இருபினும் ஜேக்கை தன்னுடைய முன்மாதிரியாக நினைக்கிறாள்.ஜேக் இல்லாத சமயங்களில் அவனது பாதுகாக்கும் வேலையை இவள் செய்கிறாள்.அதில் பல சவால்களை சந்திக்கிறாள்.பின்னர் ஜேக் படும் கஷ்டங்களை உணர்கிறாள்.

சூசன் லுவாங்-லாங் : ஜேக் மற்றும் ஹேலியின் தாய்.இவருக்கு இயற்கையாக டிராகனாக மாறும் சக்தி கிடைக்கவில்லை.இவர் ஒரு சாதாரண மனிதனை காதல் திருமணம் செய்து கொள்கிறார்.அது அவரது அப்பாவிற்கு பிடிக்கவில்லை.அவருக்கு மாயமந்திர உலகம் பற்றி தெரியாது.தனது மனித கணவர் ஜொனாதன் மந்திர இரகசியங்களை அறிந்து கொள்ளாமல் இருக்க தன்னால் முடிந்த உதவியை செய்கிறார்.

ஜொனாதன் லாங் : ஜேக் மற்றும் ஹேலியின் தந்தை.இவருக்கு மாயமந்திர உயிரினங்களை பற்றி ஒன்றும் தெரியாது.மிட்வெஸ்டில் இருந்து வந்த ஒரு தொழிலதிபர்.டிராகன்களின் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பது அவருக்கு தெரியாது.தொடரின் இறுதியில் அவருக்கு தன் மனைவியின் குடும்ப ரகசியம் தெரிகிறது.முதலில் அதிர்ச்சி அடைகிறார்.பின்னர் அவர்கள் மீது கொண்ட அதிகப்படியான பாசத்தினால் அவர்களுடன் இணைகிறார்.

ரோஸ் (ஹன்ட்ஸ்கர்ல்) : ஜேக்கின் கனவுக்கன்னி.ஜேக் இவள் மீது அதிக பாசம் கொண்டுள்ளான்.இவளும் அவன் மீது அதிக பாசம் கொண்டிருந்தாள்.இவள் இயற்கை டிராகன்களை அழிக்கும் ஹன்டஸ்கிலனின் ஒரு உறுப்பினர்.இவள் ஹன்டஸ்கர்ல் என்று அழைக்கப்படுகிறாள்.இவள் பிறக்கும் போது இவளது கையில் சிவப்பு நிற  சீன டிராகன் அடையாளம் கையில் காணப்பட்டது.இவளுக்கு ஒரு இரட்டை சகோதரி இருக்கிறாள்.கடைசி அத்தியாயத்தில் ஜேக் உடன் இணைகிறாள்.

பேராசிரியர் ஹான்ஸ் ரோட்வுட்  : ஜேக்கின் 57 வயதான ஜெர்மன் பள்ளி ஆசிரியர்.இவர் மந்திர உயிரினகளை கண்டறிய தன் வாழ்நாள் முழுவதும் செலவழித்தார்.இவர் மந்திர உயிரினங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.இவர் அமெரிக்க டிராகனின் உண்மை அடையாளத்தை உலகிற்கு கொண்டுவர முயற்சி செய்கிறார்.அதற்காக அவர் பல்வேறு மோசடி நடவடிக்கைகளை எடுக்கிறார்.

முக்கிய வில்லன்கள் :

தி ஹன்ட்ஸ்மேன் : ஹன்ட்ஸ்கிலனின் தலைவர்.இவர்கள் மந்திர உயிரினங்களை லாபத்திற்காக வேட்டையாடி திருடும் திருடர்கள்.இவர்கள் அதிக பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்துபவர்கள்.ஹன்ட்ஸ்கிலனின் உறுபினர்கள் டிராகன் போன்று காணப்படும் பிறப்பு அடையாளத்தை கொண்டுள்ளார்கள்.மாய சமுகதிற்கு காணப்படும் 13 எதிரிகளில் ஹன்ட்ஸ்மேன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

இரண்டாம் முக்கிய எதிரியான தி டார்க் டிராகன் : "ஹோம்கமிங்" எபிசோடில் தி ஹன்ட்ஸ்மேன் இறந்த பிறகு அவர் புதிய வில்லன்.

பனானாஸ் பி : ராப்பர் பாணியைக் கொண்ட ஒரு குரங்கு. இது ஜேக்கின் தற்காலிக விலங்கு பாதுகாவலர், பின்னர் தான் கவுன்சிலர் சாங்கின் உதவியாளர் எனதெரிய வந்தது.

கவுன்சிலர் சாங் : டிராகன் கவுன்சிலின் உறுப்பினரும், டார்க் டிராகனின் உதவியாளரும் ஆவார்.லாவ் ஷி முதன்முதலில் டார்க் டிராகனுடன் சண்டையிட்டபோது டார்க் டிராகனுடன் ஜோடி சேர்ந்தார்.

எலி எக்செல்சியர் பாண்டரஸ்  :மிக சக்திவாய்ந்த மந்திரவாதியாக இருக்க முயற்சிக்கும் ஒரு இருண்ட மந்திரவாதி ஆவார்.

Youtube

Youtube